புதுக்கோட்டை மாவட்ட கிறிஸ்துவ நல்லிணக்க பேரவை சார்பாக நடத்தப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
விழாவில் அனைத்து சமுதாய மத குருமார்களும் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட கழக செயலாளர்கேகே. செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார், இந்த நிகழ்வில் மாநகர மேயர் திருமதி. திலகவதி செந்தில்,மாநகர துணை மேயர் லியாக்கத்அலி , சாயிமதாசிவபிருந்தா தேவி ஆசிரம நிர்வாகி தயானந்த சந்திரசேகரன் மற்றும் திமுக முன்னோடிகளும், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், வட்ட திமுக நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

