கரூர் மாவட்ட திமுக சார்பில் இன்று காலை கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் ஒரு பகுதியாக சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் வைத்து கரும்புகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சமத்துவம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும்

வகையில் திமுக அலுவலகம் முன்பு வண்ணம் கோலம் வரைந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
தமிழர் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் பாரம்பரிய உடைகள் அணிந்து, இனிப்பு பொங்கல் பகிர்ந்து மகிழ்ந்தனர். சமூகத்தில் அனைவரும் சமம் என்ற கருத்தை

வலியுறுத்தும் வகையில் இந்த சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கட்சி அலுவலக வளாகத்தில் விழாக்கோலத்துடன் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் சக்கர பொங்கல் வழங்கப்பட்டது.

