கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவில் மேயர் மற்றும் ஆணையர் உற்சாகமாக கும்மியடித்துக் கொண்டாட்டம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த

வகையில், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த விழாவில், மாநகராட்சி மேயர்,மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வண்ணக்

கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டனர்.
பானையில் பால் பொங்கி வரும்போது, அங்கு கூடியிருந்தவர்கள் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
விழாவின் சிறப்பம்சமாக, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சுதா ஆகியோர் ஊழியர்களுடன் இணைந்து வட்டமாக நின்று கும்மியடித்தனர். பாரம்பரிய

இசைக்கேற்ப அவர்கள் கும்மியடித்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

