பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி அன்று திடீர் உடல்நலக் குறைவால் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பிரச்சனை சந்தேகத்தால் அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் சாதாரணமானவை என்று மருத்துவமனை தெரிவித்தது. ராமதாஸின் உடல்நிலை நிலையானதாக இருந்தாலும், சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் தங்கியிருந்தார்.
னது தந்தையான ராமதாஸை மருத்துவமனையில் சந்திக்க சென்றார். ஆனால், ராமதாஸ் ICU-வில் இருப்பதால், பார்வைக்கு அனுமதி இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது என செய்தியாளர்களை சந்தித்தபோது அன்புமணி தெரிவித்திருந்தார். அதே சமயம் சமூக ஊடகங்களில், “ஐயாவிற்கு ஏதாவது ஆனால் தொலைத்துவிடுவேன்” என்று அன்புமணி பதிவிட்டிருந்ததும் பேசுபொருளாக வெடித்திருந்தது.
இப்படியான சூழலில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின் முதன் முதலாக இன்று செய்தியாளர்களை சந்தித்து நான் ICU-வில் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். இன்று பேசிய அவர் ” மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து அரசியல் கட்சியினரும் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். ஒரு கட்சி மட்டும்தான் விசாரிக்கவில்லை – அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி” என்று அவர் குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து, அன்புமணியின் “தொலைத்துவிடுவேன்” என்பதை மறைமுகமாக விமர்சித்து, “அய்யாவை பார்த்துக்கொள்ள துப்பு இல்லை. மாடு மேய்க்கிற சிறுவன் கூட இப்படி பேச மாட்டான். அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை, அது இன்று முற்றிப்போய்விட்டது” என்று கடுமையாகக் கூறினார். மேலும், ” ஐசியூவுக்கு நான் செல்லவில்லை, இதய ரத்தக்குழாய்கள் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்” என்றும் தெரிவித்தார்.இந்த விளக்கம், பாமக கட்சியின் உள் பிளவை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. ராமதாஸ், “அரசியல் பாகுபாடு இன்றி பலர் நலம் விசாரித்தனர். இனி தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்திப்பேன்” என்று கூறி, கட்சியின் எதிர்கால உத்திகளை வலுப்படுத்தும் எனவும் ராமதாஸ் தெரிவித்தார்.