Skip to content

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது– திருமா.,வேதனை

திமுக கூட்டணியில் 10 சட்டமன்ற தொகுதிகள் தேவை என விசிக வலியுறுத்திய நிலையில் திமுக தயக்கம் காட்டிவருகிறது.

விசிகவுக்கு வெறும் 7 தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக தலைமை முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முகநூல் நேரலையில் பேசிய திருமாவளவன், முன்னிறுத்தும் அரசியலை தக்க வைப்பதற்காகவே கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என தெரிவித்தார்.

10-க்கும் கீழ் மிக சொற்பமான இடங்களை பெறுகிறபோது, நீண்ட காலமாக காத்திருப்போர் பட்டியலை கணக்கில்கொள்ள வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார். இதனால் வேட்பாளர் நேர்காணல் நடத்தும் சூழல் இல்லை எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.

தொகுதிப் பங்கீட்டில் விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தியில் இருப்பதால் தொடர்ந்து அதிருப்தி நிலவி வருகிறது.

error: Content is protected !!