தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை மாதம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரமாக உயர்த்தி அரசு அறிவித்து உள்ளது.இதுபோல முன்னாள் உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் 15 ஆயிரத்தில் இருந்து 17,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு மருத்துவப்படி ரூ.75ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.