Skip to content

திருச்சி காந்திமார்கெட் 25 சங்கங்களின் நிர்வாகிகள்-ஆலோசனை கூட்டம்

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருச்சி பழைய பால் பண்ணை வலிமா மகாலில்,கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் நடந்தது.செயலாளர் என். டி.கந்தன் வரவேற்றார்.அவைத் தலைவர் யு எஸ் .கருப்பையா, ஒருங்கிணைப்பாளர் வி.என் கண்ணதாசன், மற்றும் ஆலோசகர்கள், துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். முடிவில் பொருளாளர் ஜி. வெங்கடாசலம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் ஒன்பதாம் தேதி அன்று அடிக்கல் நாட்ட உள்ளதாக அறிகிறோம்.கடந்த 29.6.2024 அன்று இதே மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் புதிய மார்க்கெட் வடிவமைப்பு எந்த வகையிலும் சாத்தியமில்லாமலும், போதுமானதாகவும் இல்லை என்று வியாபாரிகள் நாங்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். அப்போது கலெக்டர் எங்களை மீண்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பிறகு புதிய மார்க்கெட் ஒழுங்குபடுத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் இன்றுவரை எங்களை (காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ) அழைத்துப் பேசவில்லை. இந்நிலையில் இன்று (2-ந்தேதி) வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு எங்களை (காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ) சந்திக்க கலெக்டர் நேரம் ஒதுக்கி உள்ளார். இதன் அடிப்படையில் இன்று மாலை காந்தி மார்க்கெட்டின் 25 சங்கங்களின் நிர்வாகிகளும், கூட்டமைப்பின் தலைமையில் கலெக்டரை நேரில் சந்தித்து வியாபாரிகளின் கோரிக்கைகளை முன் வைக்க உள்ளோம். இன்று மாலை பேச்சுவார்த்தையில் நல்லதொரு விரிவான தெளிவு கிடைக்கும் என நம்புகிறோம். தமிழக முதல்வர் திருச்சி வரும் நேரம் எங்களது காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்புகிறோம். இதனை முன் வைத்தே அடுத்தடுத்து எங்களது செயல்பாடுகள் எவ்வாறு என்பதை ஆலோசித்து முடிவு செய்வோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

error: Content is protected !!