கடந்த 2/07/2025 அன்று கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதி சார்ந்தவர் கார்த்திக் என்பவர் அதே பகுதியில் சபரி ஐயங்கார் பேக்கரியில் பிறந்தநாள் கேக் வாங்கியுள்ளனர்.
கேக் வெட்டி சாப்பிட்ட பின் திடீரென பிறந்தநாள் கொண்டாடிய கார்த்திக் மற்றும் அவரது தங்கை 2 பேருக்கு வாந்தி , மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கேக்கை திருப்பி பார்த்த போது அது கருப்பு மற்றும் பச்சை நிற பூஞ்சை தாக்கி கெட்டு போய் இருந்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட நபர்கள் ஆரம்ப சுகாதார நிலையம்
சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார். பின்னர் மீண்டும் வாந்தி மயக்கம் வயிற்று வலி நிற்காத காரணத்தால் சின்னதாராபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சின்னதாராபுரத்தை சார்ந்த பொதுமக்கள் அந்த சபரி ஐயங்கார் பேக்கரியில் தொடர்ந்து காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும் அந்த பேக்கரி மீது மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் பலமுறை மனு அளிக்கப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து காலாவதி பொருட்களை விற்பனை செய்யும் பேக்கரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு வேண்டும். இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக சின்னதாராபுரம் காவல் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.