டீக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு
திருச்சி வயலூர் ரோடு சீனிவாசன் நகர் அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் மைதீன் (வயது 43). இவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கே.கே.நகர் பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் கத்தி முனையில் இவரை மிரட்டி பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பெயரில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக கே.கே.நகர் கே. சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்ற வாலிபரை கைது செய்தனர் .அவர் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்து பணம், கத்தி, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
வீடு புகுந்து திருட்டு..
திருச்சி பாபு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி குள்ளம்மாள் (வயது 50). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீடு புகுந்து ஒரு வாலிபர் வெள்ளி ஆங்கிலேட், மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டார். இதுகுறித்து குள்ளம்மாள் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜேஸ்வரி வழக்குப்பதிந்து சந்தேகத்தின் பெயரில் ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.
டூவீலர் திருட்டு
இதேபோல் திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகர்பகுதியில் ஒரு இருசக்கர வாகன ஷோரூம் முன்பு நிறுத்தி இருந்த டூவீலர் திருட்டு போனதாக செந்தில்நாதன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கண்ட்ரோல்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.