பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2பேர் கைது
ஸ்ரீரங்கம் அருணா நகரை சேர்ந்தவர் சுப்பு (வயது 67) இவர் திருச்சி இபி ரோடு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8ந் தேதி பெட்ரோல் பங்கிற்கு ஒரே வண்டியில் மூன்று பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர். பிறகு அவர்களுடைய இருசக்கர வாகனத்திற்கு பங்க் ஊழியர் சுப்பு பெட்ரோல் நிரப்பியுள்ளார். பிறகு பணம் கேட்டதற்கு மூன்று பேரும் தரமாட்டேன் என்று கூறி சுப்புவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திடீரென்று ஆத்திரமடைந்த மூன்று பேரும் சேர்ந்து பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியை காட்டிய மிரட்டி அவரிடமிருந்து ரூ2,000 பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து சுப்பு கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த மூன்று பேரைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தாராநல்லூர் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 23) இபி ரோடு பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (வயது 23) காட்டூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் ஆகிய மூன்று பேர் என தெரிய வந்தது.
இதையடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சந்துரு,அஸ்வின் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய லோகநாதனை தேடி வருகின்றனர்.
வாலிபரிடம் ஜிபே வில் இருந்த பணத்தை பறித்தவர் கைது
திருச்சி மாவட்டம் முசிறி நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் முரளி (28). இவர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அடையாளம் தெரியாத ஒரு நபர் முரளி அருகில் வந்து தன்னுடைய தாய்க்கு உடல்நிலை சரியில்லை.இது தொடர்பாக போன் பேச வேண்டும்.உங்களின் செல்போனை கொடுங்கள் என்று கேட்டு வாங்கி அந்த மர்ம ஆசாமி ஒருவருக்கு பேசியுள்ளார்.பிறகு செல்போனை முரளியிடம் கொடுத்துவிட்டு தன்னை பட்டவரத்து ரோடு பகுதியில் வண்டியில் இறக்கி விடுமாறு கேட்டுள்ளார்.இதனை நம்பி முரளி அந்த நபரை அழைத்துக் கொண்டு பட்டவர்த்ரோட்டிற்கு அழைத்து சென்று இறக்கி விட்டார். பிறகு அந்த நபர் முரளியிடம் மிரட்டி ரூபாய் 9 ஆயிரம் பணத்தை தன்னுடைய ஜிபே நம்பரில் போட சொல்லி மிரட்டி ள்ளார். இது தொடர்பாக முரளி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிபே நம்பரை வைத்து விசாரணை செய்தபோது சஞ்சீவி நகரை சேர்ந்த கௌதம் (வயது 19) என்பு வாலிபர்பணத்தை தேடி உள்ளார் என்று தெரியவந்தது இதை எடுத்து கோட்டை போல சார் வழக்கு பதிவு செய்து கெளதம்மை போலீசார் கைது செய்து உள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்… 4 பேர் மீது வழக்கு பதிவு
திருச்சி அக் 15- கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா ( 30) இவர் கடந்த 2021ம் ஆண்டு திருவரங்கத்தை சேர்ந்த 30 வயது இளம் பெண்ணுடன் பிசி ஏ திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து உள்ளார்..இந்நிலையில் இருவரும் காதலர்களாக மாறி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ராஜா ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு இளம்பெண்ணை வரவழைத்து அவரை திருமணம் செய்வதாக கூறி உடலுறவு கொண்டுள்ளார். இதில் அந்த இளம் பெண் கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜாவிடம் வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் அவர் திருமணம் செய்ய வேண்டுமென்றால் முதலில் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்று கூறி கர்ப்பத்தை கலைக்க மாத்திரை கொடுத்துள்ளார்.இதை எடுத்து அந்த இளம் பெண் மாத்திரையை சாப்பிட்டு கர்ப்பத்தை கலைத்துள்ளார். பிறகு திருமணம் செய்யாமல் ராஜா ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து அந்த இளம் பெண் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் ராஜா அவரது உறவினர்கள் 3 பேர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளிர்சாதன எந்திரத்தில் இருந்த காப்பர் வயர் திருட்டு.. 2 பேர் கைது
ஸ்ரீரங்கம், மேலூர் ரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் ( 71 )இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அறையில் உள்ள ஏசியை ஆன் செய்தார். அப்பொழுது ஏசி செயல்படவில்லை.இதையடுத்து குளிர்சாதன பெட்டி இருக்கும் வெளிப்பகுதிக்கு சென்று பார்த்த பொழுது அதில் இருந்த காப்பர் வயர் திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இந்த சம்பவம் குறித்து சீனிவாசன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். இப்புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவரங்க ரம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரை கைது செய்துஅவரிடமிருந்து 4 கி ஏசி காப்பர் வயரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விக்கி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டதாரி இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி மாவட்டம்தொட்டியம் அலங்கரை, கிராம பகுதியை சேர்ந்தவர் சத்தியன்.இவரது மகள் பிரியங்கா (வயது 22) இவர் எம் காம் படித்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 14 ந் தேதி பிரியங்கா தனது சகோதர் பிரகதீஸ்வரனுக்கு செல்போனில் பேசி தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து பதறி அடித்து ஓடி வந்த பிரகதீஸ்வரன்
பிரியங்காவை ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரியங்காவின் நிலைமை மேலும் மோசமானதை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியங்கா விஷம் குடித்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபர் கைது
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை கரிகாலன் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40)இவர் தனது வீட்டுக்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்று விட்டார். மறுநாள் காலை சிவகுமார் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனம் திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து சிவகுமார் திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் திருவரங்கம் ஆளவந்தான் நல்லூர் பகுதியை சேர்ந்த பதன்ராஜ் (வயது 19) என்பது தெரியவந்தது இதையடுத்து போலீசார் பதன்ராஜை கைது செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா விற்ற ரவுடி உள்பட 3 பேர் கைது
ஸ்ரீரங்கம் , வடக்கு வாசல் பட்டர் தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது மூன்று பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது திருவரங்கம் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த தீபக் ராகுல் (வயது 22) திருவரங்கம் அடையவளஞ்சான் வீதி பகுதியை சேர்ந்த பிரசன்னா (வயது 25 )மிளகு பாறை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 29) தெரியவந்தது. மேற்கண்ட 3 பேரும் சேர்ந்து கஞ்சா விற்றுக்கொண்டு இருந்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து போலீசார் தீபக் ராகுல், பிரசன்னா ஆகிய இரண்டு பேரை கைது செய்து அவரிடம் இருந்து 1,100 கிலோ கஞ்சா மற்றும் பணம் ரூபாய் 400 வரை பறிமுதல் செய்துள்ளனர்.இதில் பிரசன்னா ரவுடி பட்டியலில் உள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கோபாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற வாலிபர் கைது
திருச்சி கருமண்டபம் ஜெ. ஆர்.எஸ்.நகர் பகுதியில் ஒரு வாலிபர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.இதனைப் பார்த்த கேகே நகர் ஐயப்பன் நகரை சேர்ந்த பிரசன்னா ( 25) என்பவரை செசன்ஸ் கோர்ட் போலீஸ் எஸ்ஐ சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 40 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.