Skip to content

யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடிப்பு: குஜராத்தில் யோகா குரு உட்பட 6 பேர் அதிரடி கைது

குஜராத்தில் யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடித்த யோகா குரு பிரதீப் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சூரத்தில் உள்ள யோகா மையத்தில் அச்சடித்து அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூ.2.9 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்தனர்.

சூரத்தில் அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் கள்ளநோட்டுகளை நாடு முழுவதும் புழக்கத்தில் விட முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரத் மற்றும் அகமதாபாத்தில் உள்ள சத்யம் யோகா மையத்தில் போலீசார் சோதனை நடத்தினர். சூரத் யோகா மையத்தில் இருந்து கள்ளநோட்டு அச்சிட பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

சூரத்தில் இருந்து அகமதாபாத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் கள்ளநோட்டுகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அம்ரேவாடி என்ற இடத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 2 கோடி ரூபாய் கள்ளநோட்டுகளுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் பிடித்தனர். சத்யம் யோகா மையத்தை நடத்தி வந்த பிரதீப் மற்றும் ஒரு பெண் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முகவர்களை யோகா குரு பிரதீப் கூட்டாளிகள் நியமித்துள்ளனர். உண்மையான ரூ.500 கொடுத்தால் ரூ.1,500க்கு கள்ளநோட்டுகளை கொடுத்து முகவர்களை சேர்த்துள்ளனர். குஜராத்தில் கள்ளநோட்டு அச்சடித்து கைதாகியுள்ள யோகா குரு பிரதீப், 2018ம் ஆண்டே சர்ச்சையில் சிக்கியவர். ஆசிரமம் நடத்தக் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி தருவதாக 10 சீடர்கள் மீது யோகா குரு பிரதீப் குற்றம்சாட்டி இருந்தார்.

10 சீடர்களின் பெயர்களையும் எழுதி வைத்துவிட்டு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து 2018ல் யோகா குரு தற்கொலைக்கு முயன்றார். சீடர்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தர முடியாமல் 2018ல் சர்ச்சையில் சிக்கிய பிரதீப், தற்போது கள்ளநோட்டு தயாரித்து கைதாகி உள்ளார்.

error: Content is protected !!