திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள உடையார் குளம் புதூர் கீழ் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் ( 44). இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனியாண்டி 41 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை அறிந்த செந்தில்குமார் மனைவி மற்றும் பழனியாண்டியை கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பழனியாண்டி பழனிவேல் ( 52). மற்றும் பழனிவேலுவின் மனைவி பூவாயி அம்மாள் ஆகிய 3பேரும் சேர்ந்து மேய்க்கல் நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த செந்தில் குமாரை இரும்புராடால் தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் அவரது தலை, இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக செந்தில்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் பழனி ஆண்டி மற்றும் பழனிவேல் ஆகிய 2பேரும் கைதுசெய்து நடத்தி வருகின்றனர். மேலும் பழனி ஆண்டி கொடுத்த புகாரி அடிப்படையில் செந்தில்குமார் அவரது மகன் ஆகாஷ் 22, செந்தில்குமாரின் மனைவி கலையரசி 40 ஆகிய 4 பேர் மீது காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி …
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள சுக்கம்பட்டி சிறு சோழன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 29 இவர் தனது மோட்டார் சைக்கிளில் மேல நடுவலூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார் அப்போது அவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார் இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது மனைவி ரேவதி கொடுத்த புகாரி அடிப்படையில் புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.