திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில் பணியாற்றும் கல்வி அதிகாரி ஒருவர், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளி சார்பில் ஆசிரியர்கள் கிடங்கிற்கு வந்து எடுத்துச்செல்ல பணித்ததாகவும், இதனால் பள்ளியில் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டதாகவும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்தநிலையில் மணப்பாறையை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் நேற்று இரவு திருச்சி பாலக்கரையில் உள்ளமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள கல்வி அதிகாரி, பள்ளி பாடப்புத்தகங்கள் எண் ணிக்கை குறைவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு வராமல் இருப்பதற்காக புத்தகங்களை எண்ணி சாக்கில் கட்டிவைக் கும்படி குறு குறுஞ் செய்தி அனுப்பி இருந்தார். அப் போது குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை உள்ள சில பள் ளிகளின் ஆசிரியர்கள் சொந்த விருப்பத்தில் புத்தகத்தை எடுத்து சென்றார்கள். ஆனால் அதனை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைத ளங்களில் அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக சம்பந் தப்பட்ட ஆசிரியர்கள் உரிய விளக்கத்தை அளித்துள்ளனர்.
அனைத்து பள்ளிகளுக்கும் முறையாக புத்தகங்கள் பள் ளிக்கே சென்று வழங்கப்பட் டுள்ளதாக மணப்பாறை ஒன் றியத்தில் பணியாற்றும் ஆசி ரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே வட்டாரக்கல்வி அலுவலர் மீது திட்டமிட்டு வீண்பழி சுமத்தியுள்ளனர். தவறான குற்றச்சாட்டுக்காக ஒருவர் பாதிக்கப்படக்கூ டாது. ஆகவே இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
