திருச்சி சோமரசம்பேட்டை வசந்த நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் சோமரசம்பேட்டையில் டூ வீலர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகன் சங்கருக்கு கரூர் மாவட்டம், கோட்டைகரையான் பட்டியை சேர்ந்த ரோகிணியின் மகள் மனோன்மணியை (30) கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு ஆதீரா (3) என்ற ஒரு மகளும், ஒரு வயதில் அதிவீரா என்ற ஒரு மகனும் உள்ளனர். மனோன்மணி நேற்று முன்தினம் தனது தாயார் ரோகிணிக்கு போன் செய்து எனது வீட்டில் மாமனார், மாமியார் இருவரும் பிரச்னை செய்து வருவதாக கூறியுள்ளார். பின்னர் சங்கர் நேற்று தனது மாமியார் ரோகிணிக்கு போன் செய்து உங்கள் மகள் மனோன்மணியிடம் பேசுங்கள் என்று சொன்ன போது மனோன்மணி தனது தாயிடம் பேச மறுத்து விட்டார். பின்னர் ரோகிணி நேற்று மதியம் போன் செய்த போது மகள் போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு போன் செய்தபோது யாரும் போனை எடுக்கவில்லை. இதனால் பயந்து போன ரோகிணி சோமரசம்பேட்டையில் உள்ள தனது மகள் மனோன்மணி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தான் தனது மகள் மனோன்மணி பெட்ரூமில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து ரோகிணி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து மனோன்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மனோன்மணி திருமணமாகி 4 வருடத்தில் தற்கொலை செய்து கொண்டதால் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என ஸ்ரீரங்கம் ஆர்டிஓ சீனிவாசன் விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்ப பிரச்னை… 2குழந்தைகளின் தாய் தற்கொலை…. திருச்சியில் சோகம்
- by Authour
