தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் வெற்றிமாறன்.தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் இந்தியளவில் பல இயக்குநர்களையும் முன்னணி நடிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் நடிகர்கள் முதல் டோலிவுட் நடிகர்கள் வரை தமிழில் ஒரு இயக்குநர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என விரும்பினால் அவர்களின் முதல் தேர்வு வெற்றிமாறனாகத்தான் உள்ளது.
திரைப்படங்களை தயாரிப்பதில் இருந்து விலகுவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘பேட் கேர்ள்’ திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறன், இனி தனது ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ சார்பில் படங்கள் தயாரிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
அவர் தயாரித்த ‘மனுஷி’ மற்றும் ‘பேட் கேர்ள்’ ஆகிய திரைப்படங்கள், தணிக்கைத் துறையில் (சென்சார்) பல சிக்கல்களைச் சந்தித்தன. “தயாரிப்பாளராக இருந்தபோது பல சவால்களைச் சந்தித்தேன். இனி என் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் படம் தயாரிக்க மாட்டோம். அந்தக் கடையை மூடுகிறோம்,” என்று வெற்றிமாறன் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யப் இணைந்து தயாரித்துள்ள பேட் கேர்ல் திரைப்பட வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான கடைசி படமாக இருக்கும். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது