Skip to content

ரஜினி வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள்…பரபரப்பு

நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி சென்னை, போயஸ்கார்டன் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு ரஜினிகாந்தை காண்பதற்கு ரசிகர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தற்போது இல்லத்தில் இல்லை எனக் கூறி ரசிகர்களை கலைந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி ரசிகர்கள், திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் நடிகர் ரஜினிகாந்திற்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் புதுவருடப் பிறப்பு, தமிழ் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளில் அவரது இல்லம் முன்பு குவியும் ரசிகர்களுக்கு வாழ்த்து கூறுவது வழக்கம். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி சென்னை, போயஸ்கார்டன் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பு ரஜினிகாந்தை காண்பதற்கு ரசிகர்கள் இன்று அதிகாலை முதலே ரசிகர்கள் குவிந்தனர். நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதற்கு சிறிய குழந்தைகள் முதல் முதியோர் வரை என வயது வித்தியாசமின்றியும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மலேசியாவில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரஜினி இல்லம் முன்பு குவிந்தனர்.

இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருப்பதாக கூறி போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியதால் கூட்டமாக ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியும், இனிப்புகள் வழங்கியும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே, ரஜினி இல்லம் முன்பு குவிந்திருந்த ரசிகர்களை போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியதால் அங்கு குவிந்திருந்த ஒரு சில ரசிகர்கள் போலீசார் உடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!