திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் விவசாயி சின்னசாமி என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் திடீரென குறுக்கே வந்ததால் விவசாயி சின்னசாமி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தவிபத்து குறித்து திருப்பூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இருசக்கர வாகனத்தில் திடீரென குறுக்கே வந்த பெண்ணால் விபத்து: விவசாயி பலி
- by Authour
