கோவை மாவட்டம், நெகமம் அருகே ஆவலப்பம்பட்டி கிராமத்தில் பணம் தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். நெகமம் அருகே ஆவலப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 47 விவசாயி. இவரது தாயார் வள்ளியம்மாள் வயது 65, ஆகியோர் வசித்து வருகின்றனர்.முத்துக்குமாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூரை சேர்ந்தவர்கள் நவநீதகிருஷ்ணன், வயது 38, வடிவேல் 40 ஆகியோர் கடந்த ஒருவருடமாக தங்கி இருந்து பல்வேறு இடங்களுக்கு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் முத்துக்குமாரிடம் நவநீதகிருஷ்ணன், வடிவேல் ஆகியோர் பணம் பெற்று உள்ளனர். இதில் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் – வாங்கல் இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துகுமாருக்கும், நவநீதகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நவநீதகிருஷ்ணன், வடிவேல் தங்கிருந்த வீட்டை காலி செய்யுமாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார். நவீநீதகிருஷ்ணன், வடிவேல் இருவரும் வீட்டை காலி செய்து விட்டு தென்னந்தோப்பில் இருந்து வெளியேறி உள்ளனர் இந்நிலையில் மீண்டும் தென்னந்தோப்புக்கு சென்ற நவநீதகிருஷ்ணன், வடிவேல் ஆகியோர் வள்ளியம்மாளிடம் வாய்த்தகராறு செய்து உள்ளனர். அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த முத்துகுமார் இருவரிடமும் பேசி உள்ளார் இதில் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நவநீதகிருஷ்ணன், வடிவேல் ஆகியோர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துக்குமாரின் இடது கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே பரபரப்பு..விவசாயி வெட்டிக்கொலை-2 பேர் கைது
- by Authour
