தமிழகத்தில் அரிய வகையான முள் எலி கரூர் அருகே விவசாய தோட்டத்தில் மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்த விவசாயி: மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்ற பல முள் எலிகளை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு ,கோவை திருப்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் முள் எலிகள் காணப்படுகின்றன இந்த முள் எலிகள் மனிதனாலோ அல்லது விலங்குகளாலோ ஆபத்து ஏற்பட போகிறது என்பதை அறிந்தால் போதும் இது பந்து மாதிரி சுற்றிக்கொள்ளும் இதனால் இது சாலைகளில் வாகனங்களில் மோதி எளிதாக உயிரிழக்கிறது.
சிலர் இந்த முள் எலியை மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பி அதனை கொன்று விடுகிறார்கள் இந்த மூள் எலிகள் விவசாயிகளின் நண்பன் விவசாய பொருட்களை சாப்பிடாது ஆனால் விவசாயி பயிர்களை பாதுகாக்கும் பூச்சிகளை சாப்பிடும் ஒரு நாளைக்கு 250 முதல் 300 பூச்சிகள் வரை சாப்பிடும் செயற்கை உலகில் இல்லாமல் பூச்சிகளை ஒழிக்க இயற்கை நமக்கு கொடுத்த வரங்களில் முள் எலியும் ஒன்று தற்பொழுது இந்த முள் எலி அதிக அளவு காணப்படுவதில்லை இந்த நிலையில் கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள விவசாய தோட்டத்தில் இந்த முள் எலி கண்டெடுக்கப்பட்டது அதனை விவசாயி பத்திரமாக காப்பாற்றி வனவிலங்கு அலுவலரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார் இப்படி இந்த அரிய வகை முள் எலியை தமிழ்நாட்டில் மிகவும் அரிதாக காணப்படுகிறது அதனை இனப்பெருக்கம் செய்து அதிக அளவில்செய்தால் விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் விவசாயிகள் தெரிவித்தார்.