தண்ணீர் இல்லாமல் பயிர் கருகி வருவதால் 10 நாட்களுக்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கருகிய நெற் பயிர்களுடன் தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆகிய நான்கு ஆறுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் கல்லணை கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட ஆலங்குடி வண்ணாரப்பேட்டை எட்டாம் நம்பர் கரம்பை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 750 ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் 100 நாட்கள் ஆன நிலையில் தற்போது கல்லணை கால்வாயில் வினாடிக்கு 100 கன அடி மட்டுமே

தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் பயிர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் தண்ணீர் இல்லாததால் காய்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்
தொடர்ந்து கல்லணை கால்வாயில் தடை இல்லாமல் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கருகிய நெற்பயிர்களுடன் திருச்சி அரியலூர் தேசிய புறவழிச் சாலையில் எட்டாம் நம்பர் கரம்பை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மழையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்ணீர் இல்லாமல் சம்பா நெற்பயிர்கள் காய்ந்து கருகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது ஏக்கர் ஒன்றுக்கு 30,000 வரை செலவு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே தடை இல்லாமல் 10 நாட்களுக்கு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

