Skip to content

புதிய தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.. கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் ஆற்றில் சுமார் 7 கோடியில் கட்டிய தடுப்பணை மற்றும் தடுப்பு சுவர் கடந்த வருடம் சேதமான நிலையில் புதிய தடுப்புச் சுவர் கட்டித் தர வேண்டும், சலவைத் தொழிலாளர்கள் பயன்பெற அழகிரிபுரம் பகுதியில் படித்துறை கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி – அய்யாறு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும், கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை

உடைப்பால் சலவை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், சலவை தொழிலாளர்களுக்கு படித்துறை கட்டித்தர வேண்டும் என்பதனை வலியுறுத்தி விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சலவை தொழிலாளர்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

error: Content is protected !!