மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் திடீரென எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஜூன் மாத இறுதிக்குள் நிவாரணம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்திருந்த நிலையில் இதுவரை நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் கூட்ட அரங்கில் ஆட்சியர் முன்னர் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் முழக்கம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது. அவர்களை சமாதானம் செய்ய மாவட்ட ஆட்சியர் முயற்சி செய்த நிலையில், அதனை ஏற்காத விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்ன இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு கடந்த ஜூன் மாதத்துக்குள் நிவாரணம் பெற்று தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்த நிலையில் இதுவரை எதுவும் நிவாரணம் விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாகவும், அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் விவசாயிகளை திரட்டி தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு அறிவித்த குறுவை தொகுப்பு திட்டம் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா..
- by Authour
