நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் வருவதாக அறிவித்து விட்டு திடீரென வருகை ரத்து செய்வதாக அறிவித்ததால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த மழையில் அறுவடை செய்து உடனடியாக கொள்முதல் செய்யாததால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நனைத்து முளைக்க துவங்கின. நெல் ஈரப்பதம்

அதிகரித்தது. 17 சதவீதம் வரை உள்ள ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்து வரும் நிலையில், ஈரப்பதத்தை உர சதவீதம் வரை தளர்த்த வேண்டும் என தமிழக அரசு விடுத்த கோரிக்கை ஏற்று,
மத்தியக் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். இன்று காலை வண்ணாரப்பேட்டை, பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ராரா முத்திரை கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து நெல் மாதிரிகளை சேகரித்து வருகை தர உள்ளனர் என அறிவிக்கப்பட்டன. இதனை அடுத்து ஏராளமான விவசாயிகள் அந்தந்த கொள்முதல் நிலையங்கள் முன்பு காத்திருந்தனர் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மதிய குழுவினர் வருகை ரத்து என அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

