Skip to content

இந்த விபரங்களை கொடுக்கா விட்டால் “பாஸ்டேக்” செல்லாதாகி விடும்…

  • by Authour

சுங்கச்சாவடிகளில்(டோல்) சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு காத்திருப்பதை குறைக்கவும், மோசடிகளை தடுக்கவும், பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி, பாஸ்டேக் ஸ்டிக்கர் வாகனங்களின் முன்புறம் ஒட்டப்படுகிறது. மேலும் சம்மந்தப்பட்ட டோல் வழியாக வாகனம் செல்லும் போது அங்குள்ள ஸ்கேன் மிஷனில் பாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு சுங்கக்கட்டணம் நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து சென்று விடும்… டோல்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் காத்திருந்து பணம் செலுத்துவதை தவிர்க்கவும், நேரம் விரயமாவதை தடுக்கவும் இந்த நடைமுறை அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது பாஸ்டேக் சேவையை, பல்வேறு வங்கிகள் அளிக்கின்றன. இந்த நிலையில் என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பண பரிவர்த்தனை வாரியம், இது தொடர்பான புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது. இவை, இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி, பாஸ்டேக் பயன்படுத்துவோர், கே.ஒய்.சி., எனப்படும் தங்களுடைய சுயவிபரக் குறிப்புகளை தெரிவிக்க வேண்டும். அதாவது பாஸ்டேக் வாடிக்கையாளர்கள் வாகனங்களின் பதிவு எண், சேசிஸ் எண் ஆகியவற்றை, பாஸ்டேக் உடன் இணைக்க வேண்டும். மேலும், வாகனத்தின் உரிமையாளரின் மொபைல் போன் எண்ணும் இணைக்கப்பட வேண்டும்.வரும், அக்., 31க்குள் இந்த விபரங்களை, பாஸ்டேக் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெற வேண்டும். இல்லாதபட்சத்தில், அந்த பாஸ்டேக் செல்லாததாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!