Skip to content

கோரவிபத்து- சமயபுரம் பாதயாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் நடந்த இந்த துயர விபத்தில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மலர்க்கொடி, விஜயலட்சுமி, சசிகலா ஆகியோரும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்.
சென்னையைச் சேர்ந்த கெளதம் என்பவர் அதிவேகமாக ஓட்டிவந்த கார் மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

கடந்த 2024 ஜூலையில் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில், இதேபோல சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில், முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

error: Content is protected !!