Skip to content

தனியார் பள்ளியில் தீ விபத்து.. 4 பஸ்கள் நாசம்.. கேரளாவில் பரிதாபம்

கேரள மாநிலம் செங்கோட்டுக்கோணம் மாவட்டத்தில் துண்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் திடீரென தீ ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் எரிந்துகொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் இந்த பயங்கர தீ விபத்தில் பஸ்கள் முற்றிலும் எரிந்து எழும்பு கூடானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவகலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது சதிச்செயல் என சந்தேகிக்கப்படுவதால் பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் 3 பஸ்கள் முற்றிலுமாகவும், ஒரு பேருந்து பகுதியளவும் எரிந்து நாசமானது. பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பேருந்துகள் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!