திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சக்தி நகரில் வசித்து வருபவர் குட்டி(எ) சீனிவாசன் என்பவர் திமுக கட்சியின் 2 வார்டு கவுன்சிலராக செயல்பட்டு வரும் நிலையில்,
இன்று அவரது வீட்டில் மின் கசிவு காரணமாக திடீரென வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட தீயணைப்பு துறை அலு

வலர் ஜாஸ்மின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் வீட்டிலிருந்த டிவி, வீட்டின் கதவு, சமையலறை, நாற்காலிகள், வீட்டில் வைத்திருந்த

ஆவணங்கள், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எறிந்து நாசமானது. மேலும் தீயணைப்புத்

துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின் கசிவு காரணமாக திமுக கவுன்சிலரின் வீடு தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

