Skip to content

எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

டெல்லியில் பீஷாம்பார் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் எம்.பி.க்களுக்கான குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. நாடாளுமன்ற மேலவையின் எம்.பி.க்கள் வசிக்க கூடிய இந்த கட்டிடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டிடம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், 14-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. கட்டிட வளாகத்தின் மேல் தளத்தின் வெளிப்புறத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என டெல்லி தீயணைப்பு அதிகாரி புபேந்தர் கூறினார். கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.எனினும், எங்களுடைய பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுவரை உயிரிழப்புகள் எதுவும் இல்லை என கூறினார். ஆனால், 3-ம் தளத்தில் வசித்து வரும் நபர் ஒருவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

error: Content is protected !!