Skip to content

பட்டாசு ஆலை விபத்து… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்..

  • by Authour

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில்

காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள முகமது சுதீனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!