Skip to content

பட்டாசு ஆலை வெடிவிபத்து… 6 பேர் உடல் கருகி பலி

  • by Authour

ஆந்திரா மாநிலம் டாக்டர் அம்பேத்கர்  கோனசீமா மாவட்டம் ராயாவரத்தில் ஸ்ரீ கணபதி பட்டாசு உற்பத்தி  தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு அதிக அளவில் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வந்தனர். இந்தநிலையில் தீடிரென  தீ பிடித்து எரிய தொடங்கியது. அதில் இருந்து தப்பிக்கவும் தீயணை அணைக்க முயன்றும் முடியாத நிலையில்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு  வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு மீட்பதற்குள் இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 8  பேர்  காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.  அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து அறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளிடம் போனில் பேசினார். விபத்தில் பலர் இறந்ததற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்தார் விபத்துக்கான காரணங்கள், தற்போதைய நிலைமை, நிவாரண முயற்சிகள் மற்றும் மருத்துவ உதவி குறித்து அதிகாரிகளிடமிருந்து விவரங்களை கேட்ட அறிந்து கொண்டார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளில் பங்கேற்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!