அமெரிக்காவின் கான்சாஸ் என்ற இடத்தில் இருந்து ஒரு விமானம் 60 பயணிகள், 4 ஊழியர்களுடன் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு வாஷிங்டன் ரீகன் விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது.(அமெரிக்க நேரம் புதன்கிழமை இரவு 9.30 மணி)
விமான நிலையம் அருகே வந்ததும் விமானி அங்கு விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும் விமானத்தை 400 அடிக்கு இறக்கினார். அப்போது விமானம் 140 மைல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது.
அந்த விமான நிலையத்தில் ஒரு ராணுவ பயிற்சி விமானம் 3 வீரர்களுடன் அங்கிருந்து மேலே கிளம்பியது. அப்போது பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் விமானம் அருகே உள்ள போடாமாக் நதியில் விழுந்தது.
இந்த விபத்தில் விமானத்தில்இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டாலும், உடனடியாக 19 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன. ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மற்றவர்களின் கதி என்ன என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. விமானத்தில் பயணித்தவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது
ராணுவ ஹெலிகாப்டர் , விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை மீறி கிளம்பியதால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.