Skip to content

கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பேரிடர் மீட்பு படையினர் திருச்சி வருகை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தில்  பலத்த மழை பெய்து வருவதால்  அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர்  மேட்டூர்  அணைக்கு  வருவதால் மேட்டூர் அணை  கடந்த 2 மாதத்தில் 4 முறை நிரம்பி உள்ளது.  மேட்டூர்அணையில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.  மேட்டூர் அணைில் இருந்து உபரி நிர் 16 கண் மதகு வழியாகவும் வெளியேற்றப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு  ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 157 கன அடி நீர் வந்தது அதில் காவிரியில் 28, 258 கன அடியும் கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 899 கன அடியும்  3 வாய்க்கால்களில் ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக காவிரி , கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
ஏற்கனவே மாவட்ட கலெக்டர் சரவணன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார் ,மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர்
வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் கிராமங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர், நீர்வரத்து அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஆற்றில் குளிக்கவோ,  நீந்தவோ மீன்பிடிக்கவோ சலவை பணிகள் மேற்கொள்ளவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது .மேலும் பாதுகாப்பற்ற முறையில் கரையோரங்களில் ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர் திறப்பு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கப்படும் என்பதால் கொள்ளிடம் கரையோர மக்கள், சலவைத் தொழிலாளர்கள், கால்நடை ஓட்டிச் செல்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடத்தில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், திருவானைக்காவல் புதிய மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட பகுதியில் கரையோரம் அரிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. எனவே மண் அரிப்பை தடுக்க நீர் வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கத்ததை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 30 பேர் நேற்று முன்தினம் மாலை திருச்சி வந்தனர். மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும் திருச்சியில் தயார் நிலையில் உள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர்  கொள்ளிடத்தில்  திறக்கப்பட்டுள்ளது.
காவிரி, கொள்ளிடத்தில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கரையோர கிராமங்கள், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தேசிய பேரிடர் மீட்புப்படை கமாண்டர் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான 30 வீரர்கள் கொண்ட படையினர் 3 வாகனங்களில் நேற்று முன்தினம் மாலை திருச்சிக்கு வந்து, குணசீலத்தில்   முகாமிட்டுள்ளனர்.
அதேபோல கிராப்பட்டி முதலாவது பட்டாலியனில் மாநில பேரிடர் மீட்புப்படை கமாண்டர் ரவிச்சந்திரன் தலைமையில் தயார் நிலையில் உள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் குணசீலம் பகுதியில் முகாமிட்டு முசிறி குணசீலம்,  உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.

error: Content is protected !!