கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இக்னேஷியஸ் டெலாஸ் புளோரா(38). இவர் ராணுவத்தில் மருத்துவத்துறையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு கட்டங்களில் பதவி உயர்வு பெற்று இப்போது ராணுவ நர்சிங் பிரிவில் மேஜர் ஜெனரல் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்று உள்ளார். இந்த பதவியை பெற்ற முதல் பெண் புளோரா என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி புளோராவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். ராணுவ அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
