Skip to content

வெளிநாட்டு மது விற்ற மத்திய போலீஸ்காரர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆர் .கே .நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்  (58) இவர் மத்திய ரிசர்வ் போலீசாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் பணிக்கு சொல்லாமல் உள்ளார். மணிகண்டன் வெளிநாட்டு மது பாட்டல்களை மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்து புரோக்கர்கள் மூலம்  வாங்கி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வெளிநாட்டு மதுவை  கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பினாயில் விற்பனை செய்வதா கூறி வந்த அவர்  அவ்வப்போது பினாயில் பாட்டிலும் விற்பனை செய்து உள்ளார்.  வெளிநாட்டு மதுரை  திருட்டுத்தனமாக விற்பதை அறிந்த  பொள்ளாச்சி  மகாலிங்கபுரம் போலீசார் திடீரென அந்த வீட்டை சோதனை போட்டனர்.

அங்கு ஏராளமான  வெளிநாட்டு மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அந்த மது பாட்டல்களை பறிமுதல் செய்தனர்.   அங்கிருந்த 96 வெளிநாட்டு மது பாட்டல்களை போலீசார் பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!