அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் வா.மைத்ரேயன், கடந்த ஆகஸ்ட் மாதம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயன் திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
யார் இந்த மைத்ரேயன்? – பிரபல மருத்துவரான வா.மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில துணை தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தார்.
பின்னர், 1999 -ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், பழனிசாமி அணிக்கு தாவினார்.
பின்னர், 2022-ல் மைத்ரேயன், ஓபிஎஸ் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2023 ஜூன் மாதம் அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் மீண்டும் 2024-ல் அவர் அதிமுகவில் இணைந்தார்.இப்போது, அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

