Skip to content

கரூரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

கரூர் மாநகர் பகுதியில் செயல்படும் கோட்டைமேடு நடுநிலை பள்ளியில் கடந்த 1981-ம் ஆண்டு முதல் 1989 ம் ஆண்டு வரை எட்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் இன்று அதே பள்ளியில் ஒன்று கூடினர்.

பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்த போது எடுத்த குழு புகைப்படத்தை வைத்து பழைய ஞாபகத்தால் அனைவரும் whatsapp தளம் மூலம் ஒன்று சேர்த்து இன்று அனைவரும் படித்த பள்ளியில் ஒன்று கூடினர். தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை வரவழைத்து ரோஜா மலர்கள் கொடுத்து வரவேற்ற பிறகு சால்வை அணிவித்து கௌரவ படுத்தினர்.

படிக்கின்ற காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அப்போது ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் தங்களிடம் பயின்ற அனைத்து மாணாக்கர்களையும் வாழ்த்தி, தங்களது பிள்ளைகளைப் போலவே ஆசீர்வதித்து மகிழ்ந்தனர் ஆசிரியர்கள்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த முன்னாள் மாணவர் ஆனந்தராஜ் தெரிவிக்கும்போது, இதே கோட்டைமேடு பள்ளியில் கடந்த 36

வருடங்களுக்கு முன்பு ஒன்னாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து முடித்தோம்.

அதன் பிறகு தொழில் மற்றும் குடும்ப சூழல் காரணமாக ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருந்து விட்டோம்.

இதனிடையே ஆறாம் வகுப்பு பயின்ற போது குழு புகைப்படம் எடுத்து இருந்ததை எதேச்சையாக காண நேர்ந்தது. அன்று முதல் உடன் படித்தவர்களை சந்திக்க வேண்டும் என்ற தாக்கம் ஏற்பட்டது.

இவருடைய என்னுடன் படித்த தோழியர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால் அப்போது இது குறித்து முடிவு செய்து அதற்கான பணிகளை துவக்கினோம். இன்று நாங்கள் பயின்ற அதே பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி பேசி மகிழ்ந்தோம்.

வாழ்வில் எத்தனை உறவுகள் நட்புகள் வந்து கடந்து போகும். ஆனால் பள்ளி காலத்தில் ஏற்பட்ட நட்பும், உறவும் என்றும் மனதில் பசுமையாக இருக்கும் என்றும்,

எங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் எங்களை ஆசிர்வதித்தது நாங்கள் பெற்ற பாக்கியம் என தெரிவித்தார்.

மேலும், எங்கள் குழந்தைகளை இனி அரசுப் பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

error: Content is protected !!