Skip to content

புதுகையில் இலவச கண் பரிசோதனை முகாம்..

புதுக்கோட்டை அரசு மண்டல போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடந்தது. அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் நடந்த முகாமை அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர்  என். முகமது நாசர் துவக்கிவைத்து அவரும் கண் பரிசோதனை செய்து கொண்டார். முகாமில் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பிரிவை சேர்ந்த அலுவலர்கள்ஓட்டுனர்கள், நடத்துனர் கள், பணியாளர்கள் 100க்கும்மேற்பட்டவர்கள் முகாமிற்கு

டாக்டர் அகர்வால் கண்மருத்துமனை குழுவினரிடம் அனைத்து வகையான பரிசோதனைகளையும் கட்டணம் இல்லாமல் பார்த்து கொண்டனர். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மேலாளர் வி.சீனிவாசன் தலைமையில் கண்பரிசோதனைளை பரிசோதகர்கள் மணி, பரத், முகமது அசரப் ஆகியோர் நடத்தினர். முகாம் ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக உதவி இயக்குனர்(மக்கள் தொடர்பு) செந்தில் கவனித்தார்.

error: Content is protected !!