Skip to content

மலைவாழ் மக்களுக்கு இலவச வீடு… ரோட்டரி கவர்னர் தகவல்

கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு,திருச்சூர்,கொச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ரோட்டரி கிளை சங்கங்களை இணைத்து ரோட்டரி கிளப் 3201 செயல்பட்டு வருகிறது.கல்வி,மருத்துவம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ரோட்டரி 3201 மாவட்டத்தின் 2024-25 ஆண்டுக்கான புதிய ஆளுநராக கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வரும் ஜூலை 1 ம் தேதி அவர் பதவி ஏற்க உள்ள நிலையில், வரும் ஆண்டில் தமது செயல்பாடுகள் குறித்து,செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார்.
சேவை திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக கூறிய அவர், குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர் இன மலைவாழ் மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருவது, கொங்கு மண்டலத்திற்கு முக்கிய நீராதாரமான கோவையில் உள்ள கெளசிகா நதி வழித்தடத்தை மீட்டு எடுப்பதில் புதிய திட்டம் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.  சைபர் கிரைம் குறித்த தமிழ்,மலையாளம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட சைபர் சேம்பியன்ஸ் எனும் கையேடுகளை  பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகளிடையே வழங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் நான்காவது திட்டமாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள கல்லூரி மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி உதவி தொகைவழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!