கரூரில் வீட்டுமனையும் அதற்கு பட்டாவும் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டாவும் கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு வாழ்வதற்கான உத்தரவாதம் செய்து கொடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களை திரட்டி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு
உறுப்பினர் பாண்டி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பின்னர் பொதுமக்கள் திரண்டு சென்று கரூர் வட்டாட்சியரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.