Skip to content

புதுகையில், 102 வயது தியாகி கவுரவிப்பு

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர். அ. கோ. ராஜராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முனைவர்  முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் 102 வயது தியாகி அ.வீரப்பனுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்அ. கோ. ராஜராஜன் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

மாவட்ட தியாகிகள் குடும்பநல பேரமைப்பு சார்பில் அதன் தலைவர் ஜிஎஸ். தனபதி  பேசினார். அதனையடுத்து அனைத்து  தியாகிகளின் வாரிசுகளும் அவரவர்களின் கோரிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலரிடம்  நேரில்  தெரிவித்தும், மனுக்களாகவும் வழங்கினர்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு செய்து கொடுப்பதாக தெரிவித்தனர்.
சில கோரிக்கைகள், மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனையும் செய்து தருவதாக அலுவலர்கள் கூறினர். நிறைவாக தியாகிகள் குடும்ப நல பேரமைப்பின் செயலாளர் ஆர். வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.

error: Content is protected !!