அதிகாலையில் கடும் குளிர்
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர்காலம் துவங்கி உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை குளிர்காலத்தை

வரவேற்கும் வகையில் உறைப்பனி பொழிவு தென்பட்டது .உதகை நகர் முழுவதும் பெய்த உறைப்பனி பொழிவால் பச்சைக்கம்பலத்தில்முத்துக்கள் பதித்தது உறைப்பனி பொழிவு காட்சியளித்தது. வாகனங்கள் மீதும், வீட்டின் கூரைகள் மீதும், புற்கள் மீதும் பனி படர்ந்து காணப்பட்டது .பனி பொழிவால் கடும் குளிர் காலநிலை நிலவுவதால் மக்களின் நடமாட்டம் இன்று அதிகாலை குறைந்தே காணப்பட்டது. இன்று பெய்த உறைப்பனி பொழிவால் மினி காஷ்மீராக மாறியது உதகை.

