Skip to content

ஆடி முதல் வௌ்ளி..அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

  • by Authour

ஆடி மாதம்,  அம்மனுக்கு உகந்த மாதம்.  அதுவும் ஆடி மாத  வெள்ளிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றது ,  தமிழ்நாட்டில் ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்,

தமிழ்நாட்டில் பிரசித்த பெற்ற அம்மன் கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவில்.  ஆடி மாதம் நேற்று பிறந்ததையொட்டி  பல்வேறு மாவட்டங்களில் இருந்து  பெண்கள்  விரதம் இருந்து  பாதயாத்திரையாக  சமயபுரம் கோவிலுக்கு வந்தனர்.  இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் காலையிலேயே பக்தர்கள் கூட்டம்  பெருமளவில் இருந்தது.  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு  பூஜைகள் நடந்தது.

பெண்கள் அம்மனுக்கு விளக்கேற்றி  வழிபாடு செய்தனர். சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. இதுபோல  உறையூர் வெக்காளியம்மன் கோவில்,  திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அமமன் கோவில்கள் மற்றும்  ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவில்,  திருச்சி மலைக்கோட்டை கோவில் என அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் குடும்பத்தோடு வந்திருந்து  வழிபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மற்றும் ராகு  கோவில் என்று அழைக்கப்படும் கீழவாசல் வட பத்திர காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது., இதையடுத்து இன்று

வடபத்ர காளியம்மன் கோவிலில் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவிலிலும் இன்று அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் நடந்தது.  பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை  வழிபட்டு சென்றனர்.

கரூர் ஆதி மாாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலையிலேயே  மாாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதுபோல கரூர் மாரியம்மன் கோவிலிலும்  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு  பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  பிரசித்திபெறற  திருவப்பூர் மாரியம்மன்,  நார்த்தாமலை மாரியம்மன் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!