ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பாமக மாநில இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாமகவில் ராமதாஸ்- அன்புமணி இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தல் பாமக நிறுவனர் ராமதாஸ் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனுக்கு மாநில இளைஞரணி தலைவர் பதவி வழங்கினார். அதற்கான நியமன உத்தரவை ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி தமிழ் குமரனிடம் வழங்கினார். இது கட்சியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.