அரியலூர் மாவட்டம் வாரணாசி அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி வளைவில் திரும்பும் பொழுது கவிழ்ந்து விழுந்ததில் கேஸ் சிலிண்டர்கள் அதிர்வில் அடுத்தடுத்து வெடித்து பயங்கர தீப்பிழம்பு கிளம்பியது. அதில் ஒரு கேஸ் சிலிண்டர் விண்வெளிக்கு செல்லும் ராக்கெட் போல எரிந்து சென்று வானளாவிய உயரத்திற்கு சென்று அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் விழும் காட்சி பதற வைத்துள்ளது. நல்ல வாய்ப்பாக தீ பற்றி எரியும் இடத்திற்கு அதிகம் அதிக அளவில்


பெருமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விசாரணையில் கேஸ் சிலிண்டர் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த விபத்து குறித்து அதன் ஓட்டுனர் கனகராஜ் தெரிவிக்கையில் சாலையில் வந்த பொழுது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் பிரேக் அடித்த போது லாரி கட்டுப்பாட்டை இழந்து தவிர்ந்ததாகவும் உடனடியாக லாரியில் இருந்து குதித்து தான் தப்பித்ததாகவும் போலீசாரிடம் கனகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். கேஸ் சிலிண்டர் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த விபத்து குறித்து அதன் ஓட்டுனர் கனகராஜ் தெரிவிக்கையில்… சாலையில் வந்த பொழுது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் பிரேக் அடித்த போது லாரி கட்டுப்பாட்டை இழந்து தவிர்ந்ததாகவும் உடனடியாக லாரியில் இருந்து குதித்து தான் தப்பித்ததாகவும் போலீசாரிடம் கனகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

