Skip to content

ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ள அறையில் பேட்டரி யுடன் ஜெனரேட்டர் இயந்திரம் இருக்கிறது. இந்நிலையில் அங்கு சென்ற வாலிபர் ஒருவர் ஜெனரேட்டர் பேட்டரியை கழற்றிக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது அந்த வழியாக பராமரிப்பு பணிக்காக வந்த உதயகுமார் என்ற ஜூனியர் அசிஸ்டன்ட் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.பிறகு அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகரை சேர்ந்தவர். சிவா (வயது 19) என்பதும்,ஜெனரேட்டர் பேட்டரியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்து அவரிடமிருந்து பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!