Skip to content

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் விழிப்புணர்வு தேவை…. மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் கருத்து

கரூர் மேலப்பாளையம் கிராமத்தில் உள்ள வடக்குபாளையம் பகுதியில் சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் மாநிலத் தலைவர் எம்.ஏ.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் நிறுவனத் தலைவர் டி.எம். ஓங்கர் கலந்துகொண்டு மாநில தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து, புதிய உறுப்பினர்களுக்கு அடையாள

அட்டைகளை வழங்கினார்.

பின்னர் ஓங்கர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் தமிழக முழுவதும் கிளைகளை துவக்கி, பொது மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், பணியாற்றி வருகிறது. அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு உள்ள உரிமைகள் ஆகியவற்றை பெற்றுத் தருவதில், முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, பெண் குழந்தைகள் பாதுகாப்பு .பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு பொதுமக்கள் போதிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதற்காக, சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் முனைப்பு காட்டி வருகிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!