Skip to content

நெல்லை: காதலியை கற்பழித்து கொன்ற வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த துரை மகன் மாரிமுத்து (26). இவர் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது  பெண்ணுடன் பழகி வந்தார்.சிறுமி வேறு ஒருவருடன் பழகுவதாக எண்ணி மாரிமுத்து ஆத்திரமுற்றார். நேற்று முன்தினம் இரவில் போதையில் இருந்த மாரிமுத்து வீரவநல்லூர்  காட்டுப்பகுதிக்கு  காதலியை  அழைத்துச் சென்றார். வேறு நபருடன் பழகுவது குறித்து  காதலியிடம்  தகராறு செய்து கழுத்தை துண்டால்  இறுக்கி கொலை செய்தார்.
பின்னர்  காதலியின்  உடல் அருகிலேயே இரவு முழுவதும் இருந்துள்ளார். முன்னதாக  அவர் காதலியை  கற்பழித்ததாகவும்  தெரிகிறது. வீரவநல்லூர் போலீசார்  அந்த  சிறுமியின்  உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவை கைது செய்தனர்


Advertisement

error: Content is protected !!