Skip to content

பெண் தற்கொலை… ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்காததால் நாகலெட்சுமி என்ற பெண் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக மையிட்டான்பட்டி ஊராட்சி செயலாளர் முத்துவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மதுரை அருகே கள்ளிக்குடி மையிட்டான்பட்டியின் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் மாவட்ட கலெக்டர் சரவணன் அளித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!