வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ3.50 லட்சம் மோசடி..
சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்.இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 34) இவரிடம் திருவெறும்பூர் நொச்சி வயல் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் அறிமுகமாகி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய கிருஷ்ணவேணி சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்குக்கு ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார்.குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வெளிநாட்டில் வேலையும் வாங்கி தராமல் பணத்தை திருப்பி தராமல் சண்முகசுந்தரம் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து
கிருஷ்ணவேணி உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கைது செய்துள்ளனர்.
வடிகாலில் விழுந்து வாலிபர் சாவு..
திருச்சி பீமநகர் கூனி பஜாரை சேர்ந்தவர் முபாரக் (27)குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். சம்பதவன்று இவர் கூனி பஜார் போலீஸ் பூத் அருகில் உள்ள வடிகாலில் இறந்து கிடந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று
முபாரக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ரயில்வே ஜங்ஷன் அருகில் ஆண் சடலம்..
திருச்சி ரெயில்வே ஜங்ஷன்புதிய பிளாட்பாரம் அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
இதையடுத்து கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கே இறந்து கிடந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த ஆண் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.