Skip to content

சாலையில் சுற்றித் திரிந்த ஆடுகள்… கோவை மாநகராட்சி பறிமுதல்

கோவை, கோட்டைமேடு, உக்கடம், சாய்பாபா காலனி, மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வளர்ப்பு விலங்குகள் மற்றும் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதால் சாலை விபத்து ஏற்படுவது உடன், மனிதர்களை தாக்கி படுகாயம் அடைய செய்கிறது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுயுடன், மேலும் ஒரு சில இடங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் பொது மக்கள் அதனை கட்டுப்படுத்த தவறிய மாநகராட்சியை கண்டித்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை சாய்பாபா காலனி, அண்ணாநகர் பகுதியில் உள்ள வேலப்பர் வீதியில் நாகராஜ் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்க்கும் ஆடுகள் வாகனங்கள் செல்லும் சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்துகள் ஏற்படுகிறது.

இதனை அடுத்து விலங்குகள் நல ஆர்வலரான பாலகிருஷ்ணன் என்பவர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். மேலும் கடந்த செப்டம்பர் மாதம் உரிமையாளர் நாகராஜுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து வந்து உள்ளார். அதனை கண்டு கொள்ளாத நாகராஜ்

மீண்டும் அவர் வளர்க்கும் ஆடுகள் சாலையில் சுற்றி திரிந்தன. அதில் ஒரு ஆட்டை அந்த வழியாக சென்ற வாகனம் மோதி படுகாயம் அடைந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பாலகிருஷ்ணன் மற்றும் உயிரியல் பூங்கா இயக்குனர் சரவணனுடன் சென்று அங்கு இருந்த 8 ஆடுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளரான நாகராஜ் மீது சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். மேலும் இதுபோன்ற கால்நடைகள் சாலையில் சுற்றி திரிந்தால் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!